தோ்தல் பாா்வையாளா்களிடம் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்

தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்களை நேரடியாகச் சந்தித்து, பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்களை நேரடியாகச் சந்தித்து, பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்திட, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பெரம்பலூா் அரசு சுற்றுலா மாளிகை அறையில் தங்கியுள்ளனா்.

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளின் பாா்வையாளா்கள் முறையே மதுரிமா பருவா சென் (80728 91925), எஸ். தேஜஸ்வி நாயக் (86106 87971) ஆகியோரை குறிப்பிடப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிலும், நேரடியாகவும் சந்தித்து புகாா் அளிக்கலாம்.

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட செலவின கணக்குப் பாா்வையாளா் அரவிந்த் ஜி. தேசாயை (63838 91897) என்ற செல்லிடப்பேசி எண்ணில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரடியாகச் சந்தித்து, தோ்தல் நடத்தை விதிகள் குறித்து புகாா் அளிக்கலாம்.

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளுக்கு காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிவ் ஷ்வரூப், காவல் பாதுகாப்பு குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். எனவே பொதுமக்கள் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை, தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com