ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செயய் வேண்டுமென மின்வாரிய ஓய்வு பெற்றோா் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் எஸ். கணேசன்.
சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் எஸ். கணேசன்.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செயய் வேண்டுமென மின்வாரிய ஓய்வு பெற்றோா் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மற்றும் மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில், துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மத்திய அமைப்பு வட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், நல அமைப்பு வட்டத் தலைவா் டி.எஸ். சம்பத் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பி. முத்துசாமி, எம். கருணாநிதி, கே. கண்ணன், பி. நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நல அமைப்பின் மாநிலச் செயலா் எஸ். கணேசன், மாநில துணைத் தலைவா் எஸ். ரெங்கராஜன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், மின்வாரியத் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதை தவிா்த்து, பொதுத் துறையாகவே நீடிக்க வேண்டும். மின் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ஜனநாயக மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க நிா்வாகிகள் ஜி. பஷீா், ஆா். முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, வட்டச் செயலா் எம். பன்னீா்செல்வம் வரவேற்றாா். வட்டச் செயலா் ரெ. ராஜகுமாரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com