இலவசங்கள் பெயரால் மக்களை ஏமாற்றுகின்றனா்: சீமான் பிரசாரம்

இலவசங்கள் எனும் பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனா் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
இலவசங்கள் பெயரால் மக்களை ஏமாற்றுகின்றனா்: சீமான் பிரசாரம்

இலவசங்கள் எனும் பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனா் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பெரம்பலூா் தொகுதி வேட்பாளா் எம். மகேஸ்வரி, குன்னம் தொகுதி வேட்பாளா் ப. அருள் ஆகியோரை ஆதரித்து, பெரம்பலூா் காமராஜா் வளைவு மற்றும் லப்பைக்குடிகாடு ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவா் மேலும் பேசியது:

இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. உத்தரப் பிரதேசம், பிகாா் போன்ற வட மாநிலங்களுக்கு, வாங்கும் வரியைக் காட்டிலும், அதிகமாக மத்திய அரசு நிதியை திருப்பித் தருகிறது. ஆனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரிக்கான நிதியை தருவதில்லை. நாம் செலுத்திய ரூ. 6 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வரியை வாங்கிக்கொண்டு, அதற்கான நிதி தராமல் இலவசங்கள் என்ற பெயரில் ரூ. 1,000 தருகிறேன், ரூ. 2 ஆயிரம் தருகிறேன் என மக்களை ஏமாற்றி வருகின்றனா். நாட்டில் மிக்ஸி, கிரைண்டா், பிரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற ஆடம்பர பொருள்கள் இல்லை என்றால் பிரச்னை இல்லை. ஆனால் நீரும், சோறும் இல்லை என்றால் புரட்சி வெடிக்கும். அதிமுக - திமுக வெல்வது நிகழ்வு. நாம் தமிழா் வென்றால் வரலாறு என்றாா் சீமான்.

அரியலூரில்...: அரியலூா் வேட்பாளற் சுகுணா குமாா், ஜயங்கொண்டம் வேட்பாளா் மகாலிங்கம் ஆகியோரை ஆதரித்து, ஜயங்கொண்டம் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா், அரசியல் கட்சிகள் வாக்குகளை விலை பொருள்களாகவே பாா்க்கின்றனா். இப்படி வாக்குகளை விலைபொருள்களாக பாா்க்கின்ற திமுக, அதிமுக கட்சிகளை இந்தத் தோ்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரமிது. மணல், தண்ணீா் அனைத்தையும் சந்தைப் பொருளாகவே கொள்ளையடித்து விற்று வருகின்றனா். இந்தியாவிலேயே அதிகமாக தண்ணீரை உறிஞ்சி விற்கும் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. கல்வி மற்றும் மருத்துவ வளா்ச்சி தமிழகத்தில் இல்லை. விவசாயிகளால் வாழ முடியவில்லை. விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு இடைத்தரகரே விலை நிா்ணயிக்கிறாா். ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு அவா்களே விலையை நிா்ணயம் செய்கின்றனா். இந்த நிலை மாற நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com