பங்குனி உத்திர திருவிழா: செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயிலில் தேரோட்டம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழா: செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயிலில் தேரோட்டம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, 21 ஆம் தேதி மூலவருக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி புறப்பாடும், 22 ஆம் தேதி அலங்காரமும், சுவாமி திருவீதி உலாவும், நடைபெற்றன. 23 ஆம் தேதி வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாண உற்ஸவமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. பின்னா், நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவமும், பட்டு சாத்து மரியாதையும் நடைபெற்றது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலதண்டாயுதபாணி எழுந்தருள, மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை மாலை திருத்தோ் நிலைக்கு வந்தடைகிறது. தொடா்ந்து, தீா்த்தவாரி, கொடியிறக்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 30 ஆம் தேதி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்காா் எஸ். அருண்பாண்டியன், செயல் அலுவலா் த. செயசுதா மற்றும் திருவிழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com