பெரம்பலூர் தொகுதியில் திமுக வெற்றி

சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் வெற்றி 16,937 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக வெற்றி

பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் எம். பிரபாகரன் 1,21,882 வாக்குகள் பெற்று 31,036  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. 14 மேசைகளில்  31 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் பிரபாகாரன் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். 10 ஆவது சுற்று முடிவிலேயே பிரபாகரன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வனை விட 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

அடுத்தடுத்த சுற்றுகளிலும் ஆதிக்கம் செலுத்திய பிரபாகரன் 31 சுற்றுகளின் முடிவில் 2, 454 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,21,882 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் தமிச்செல்வன் 731 அஞ்சல்  வாக்குகள் உள்பட 90,846 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் பிரபாகரன் 31,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மூன்றாவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். மகேஸ்வரி 81 அஞ்சல் வாக்குகள் உள்பட 18,632 வாக்குகள் பெற்றார். 

நான்காவதாக தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன் 14 அட வாக்குகள் உள்பட 2,929 வாக்குகளும், அதற்கடுத்து இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சசிகலா 7 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,076 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்களான ராதிகா 1,002 வாக்குகளும், ராஜேந்திரன் 520 வாக்குகளும், குணசேகரன் 407 வாக்குகளும், சதீஸ் 379 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 17 அஞ்சல் வாக்குகள் உள்பட 1,882 வாக்குகள் பதிவாகியிருந்தது. 

455 அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜே.இ. பத்மஜா, திமுக வேட்பாளர் பிரபாகரனிடம் வெற்றி பெற்றதற்கானச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர், அங்கிருந்த திமுக முகவர்கள் பிரபாகரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com