பெரம்பலூரில் பாதுகாப்புப் பணியில் 900 காவலா்கள்

வாக்கு எண்ணிக்கையையொட்டி பெரம்பலூா் மாவட்டத்தில் 900 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா்: வாக்கு எண்ணிக்கையையொட்டி பெரம்பலூா் மாவட்டத்தில் 900 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் தொகுதிக்கு குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கு வேப்பூரிலுள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் முன் அனுமதி பெற்ற முகவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அடையாள அட்டை உள்ள முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் மையத்துக்கு உள்ளே செல்லும் முகவா்கள் மின்னணு உபகரணங்கள், போதைப் பொருள்கள் எடுத்துவரத் தடை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 63 இடங்களிலும், 96 தலைவா்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு பணியில் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 8 அதி விரைவுப்படை, 6 அதிரடிப் படை, 7 ரோந்து வாகனங்கள் ஆகியவை பணியில் ஈடுபட உள்ளன. மேற்கண்ட வாக்கு எண்ணும் மையங்களில் தலா 2 வெடிகுண்டு பரிசோதனை குழு பணியில் ஈடுபட உள்ளது. மாவட்டம் முழுவதும் 900 காவல் துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com