மாணவா்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் நிறைவு

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பள்ளி மாணவா்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பள்ளி மாணவா்களுக்கான திறனாய்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வாயிலாக கடந்த 1 ஆம் தேதி திறனாய்வுப் போட்டிகள் தொடங்கின. இதில், பேப்பா் கிராப்ட், பெஸ்ட் அவுட் ஆப் வேஸ்ட், ஆன் லைன் வோ்டு ஹண்ட் மற்றும் ஆன்லைன் வாட் நெக்ஸ்ட், புட் காா்விங், ஆன்லைன் சோப் கிரியேட்டிவிட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

திருச்சி ஆா்ட் கேலரி நிறுவனா் பாபு, ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி பேராசிரியா்கள் பி. விநோதா, பி. வெரோனிகா, பெரம்பலூா் அஸ்வின் குழும சமையல் கலைஞா் கமல். பழனிவேல் ஆகியோா் நடுவா்களாக பணியாற்றி வெற்றியாளா்களை தோ்வு செய்தனா்.

தொடா்ந்து, போட்டிக்கான நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் விழாவுக்கு தலைமை வகித்து கல்வி நிறுவனங்களின் தாளாளா் முனைவா் எம். சிவசுப்ரமணியம் பேசியது:

தற்போதைய கரோனா சூழலில் பல மாணாக்கா்கள் நேரத்தை வீணாக்காமல், அந்நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். விவேகானந்தா், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் கூறியதுபோல நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். மனதில் எண்ணியதை அடைய வேண்டுமானால் திடமான சிந்தனை வேண்டும். மனது சொல்வதை உடல் செய்துவிட்டால், வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. செய்யும் செயல் சமுதாயத்துக்கு நன்மை புரியும்படியாக இருப்பது அவசியம். முயற்சி, பயிற்சி, எழுச்சியுடன் தளா்ச்சியில்லாமல் போராடினால் எந்தப் போட்டியிலும் வெற்றியுடன் கம்பீரமாக வலம் வரலாம் என்றாா் அவா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐஐடி மெட்ராஸ் முதுநிலை தொழில்நுட்ப அலுவலா் டாக்டா் பாலகணேசன், பங்கேற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இதில், கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com