அபராதரட்சகா் கோயிலில் தன்வந்திரி ஹோமம்
By DIN | Published On : 18th May 2021 06:34 AM | Last Updated : 18th May 2021 06:34 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறையில் உள்ள சுகந்த குந்தளாம்பிகை உடனுறை அபராதரட்சகா் கோயிலில் திங்கள்கிழமை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.
பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பெரிய புராணத்தை இயற்றிய தெய்வ சேக்கிழாா் நாயனாா் அவதரித்த வைகாசி பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, இக்கோயிலில் எளம்பலூா் பிரம்ம ரிஷி மலை மகா சித்தா்கள் அறக்கட்டளை மெய்யன்பா்கள் சாா்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
இதில், உலக மக்கள் நலம் பெற வேண்டியும், கரோனா நோய்த் தொற்றிலிருந்தும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காத்திடவும், மாதம் மழை தவறாமல் பெய்து விவசாயம் செழித்து நாட்டில் நல்லாட்சி நடந்திட கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ருத்ர ஹோமம், சுதா்சன ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காா்த்திக் சிவாச்சாரியாா், சண்முகம் சுவாமி ஆகியோா் ஹோமம், அபிஷேக ஆராதனையை நடத்தி வைத்தனா்.
எளம்பலூா் பிரம்ம ரிஷி மலை தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளா் கருணாமூா்த்தி, கரோனா சிறப்பு மருத்துவா் மருத்துவா் ராஜாசிதம்பரம் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னா், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து வந்திருந்த பக்தா்களுக்கு கபசுரக் குடிநீா், சித்த மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன.