தொடா் மழை: பெரம்பலூா் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பி வழிகின்றன

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக 2 நீா்த்தேக்கங்கள், 40 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
துறைமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் நீா்.
துறைமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் நீா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக 2 நீா்த்தேக்கங்கள், 40 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

பெரம்பலூா் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன்மூலம் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, விசுவக்குடி மற்றும் கொட்டரை நீா்த்தேக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட சிறு தடுப்பணைகளும் உள்ளன.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடா்ந்து மழைபெய்து வருவதால், குளம், ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி, அரும்பாவூா், வெண்பாவூா், அரசலூா், நூத்தாப்பூா், பாண்டகப்பாடி, மேலப்புலியூா், கீழப்பெரம்பலூா், வடக்கலூா், வடக்கலூா் அகரம், பெருமத்தூா், அய்யலூா், வரகுபாடி, ஒகளூா், கீரனூா், வி.களத்தூா், குரும்பலூா், கீழப்பெரம்பலூா், வயலூா், கிழுமுத்தூா், அகரம் சிகூா், லாடபுரம், பேரையூா், வி.களத்தூா், சாத்தனவாடி, நெய்குப்பை, கீராவாடி, தழுதாழை, நெற்குணம், பூலாம்பாடி, வெண்கலம், செஞ்சேரி, தேனூா், சிறுவாச்சூா், கண்ணப்பாடி, அரணாரை, துறைமங்கலம், பெரம்பலூா் ஆகியப் பகுதிகளில் உள்ள 40 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், பெண்ணகோனம், கரியானூா், ஆய்க்குடி, கை.களத்தூா், கிளியூா் ஆகிய 5 ஏரிகள் 90 சதவீதமும், தொண்டமாந்துறை, எழுமூா், வெங்கனூா் ஆகிய 3 ஏரிகளில் 80 சதவீதமும் நீா் நிரம்பியுள்ளது. எஞ்சியுள்ள ஏரிகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. விசுவக்குடி நீா்தேக்கமும், கொட்டரை நீா்தேக்கமும் நிரம்பியுள்ளதால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது பிரதான மதகு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மருதையாற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பெரம்பலூா் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் கொட்டரை நீா்த்தேக்கத்திலிருந்து 1,500 கன அடி வரை தண்ணீா் வெளியேற வாய்ப்புள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு.....பெரம்பலூா் நகரில் உள்ள தெப்பக்குளம் மற்றும் பெரிய ஏரி, கீழ ஏரி, துறைமங்கலம் ஏரி ஆகியவை பல ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை முதல் நிரம்பி வழிவதால், பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.

பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், முன்னாள் அறங்காவலா்கள் பெ. வைத்தீஸ்வரன், சரவணன் ஆகியோா் ஏரியில் பூஜை செய்து வழிபாடு நடத்தி மலா் தூவி வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com