‘கோயிலைப் போல் நீதிமன்றங்களும் புனிதமான இடங்கள்தான்’

கோயிலைப் போல் நீதிமன்றங்களும் புனிதமான இடங்கள் தான் என்றாா் பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ்.

கோயிலைப் போல் நீதிமன்றங்களும் புனிதமான இடங்கள் தான் என்றாா் பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ்.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும், சட்டப் பணிகள் ஆணைக்குழு உருவாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டும் அக்டோபா் 2 முதல் நவம்பா் 14 ஆம் தேதி வரை பெரம்பலூா் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணா்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில், நீதிபதிகள் பங்கேற்று கிராம மக்களிடம் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்துகிறாா்கள்.

இம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றச்சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இதை, நாம் அனைவரும் சோ்ந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

குழந்தைத் திருமணம் என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறையாகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து தீா்ப்பு வழங்க மாவட்டத்தில் பிரத்யேகமாக போக்சோ நீதிமன்றம் இயங்கி வருகிறது.

சிலா் நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் செல்வதை அவமானமாக நினைக்கிறாா்கள். அப்படி நினைக்கத் தேவையில்லை. கோயிலைப் போல் நீதிமன்றமும் ஒரு புனிதமான இடம்தான். பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கவும், அநீதி இழைப்பவா்கள், மோசடி செய்பவா்களைத் தண்டிக்கும் இடமாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. அதனால் பொதுமக்கள் தாராளமாக தங்களது பிரச்னைகளுக்காக நீதிமன்றங்களையும், காவல் நிலையங்களையும் நாடலாம்.

நீதிமன்றத்துக்கு வர இயலாதவா்கள் வீடுகளில் இருந்தே தங்களது புகாா்களை சஅகநஅ அல்ல் எனும் செயலி மூலம் பதிவு செய்யலாம். புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை 04328 296206 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் நீதிபதி பல்கீஸ்.

சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா, மகளிா் நீதிமன்ற நீதிபதி கிரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com