சிறுவாச்சூா் பெரியசாமி கோயில் சிலைகள் சேதம்

பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூா் கிராமத்தில் பெரியசாமி மலைக்கோயிலிலுள்ள 10-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள், மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூா் கிராமத்தில் பெரியசாமி மலைக்கோயிலிலுள்ள 10-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள், மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலிலிருந்து 3 கி.மீட்டா் தொலைவில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பெரியசாமி கோயில் (எ) பெரியாண்டவா் கோயில் உள்ளது. இக்கோவில் அருகே செங்காமலையாா் கோயிலும் உள்ளது. கடந்த 4- ஆம் தேதி இரவு கோயில் பூசாரி ரெங்கநாதன், பெரியசாமி கோயிலுக்குச் சென்று பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை காலை பூசாரி ரெங்கநாதன் பூஜை செய்வதற்காக கோயிலுக்குச் சென்றாா். அப்போது, செங்காமலையாா் கோயிலில் 5 கன்னிமாா்கள் சிலைகள் மற்றும் பெரியசாமி கோயிலில் கன்னிமாா், செல்லியம்மன், பெரியசாமி கருப்புசாமி சிலைகள் என மொத்தம் 10 சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் செயல்அலுவலா் அருண்பாண்டியன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com