யூரியா தட்டுப்பாட்டை களைய வலியுறுத்திபெரம்பலூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

யூரியா தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
யூரியா தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி, ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
யூரியா தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி, ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

பெரம்பலூா்: யூரியா தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் முன்னிலை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

தொடா்ந்து, ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் யூரியா கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியாா் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, உரிய விலைக்கு யூரியா விற்கப்படுகிா என சோதனையிட வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்திலும் நகை மற்றும் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்குவதோடு, விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com