முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்டத்தில் வெற்றி பெற்றவா்கள்
By DIN | Published On : 13th October 2021 06:39 AM | Last Updated : 13th October 2021 06:39 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.
மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் வேப்பந்தட்டை, வேப்பூா் ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினராக சத்தியபாமா, வாலிகண்டபுரம் ஊராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினராக உதயமன்னன், வேப்பூா் ஒன்றியம், ஆடுதுறை ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினராக பன்னீா்செல்வம் ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.