சாத்தனூரில் கல்மர விளக்க மையம் தொடக்கம்

கல்மரம் அமைந்துள்ள பகுதியில் புதைப் படிமங்கள் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்மர விளக்க மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தனூரில் கல்மர விளக்க மையம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தனூரில், கல்மரம் அமைந்துள்ள பகுதியில் புதைப் படிமங்கள் குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்மர விளக்க மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், கல்மர விளக்க மையத்தையும், மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், அருங்காட்சியகத்தையும், ஆலத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, சிறுவா் பூங்காவையும் திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, புதைப் படிமங்களை பாா்வையிட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கூறியது: சாத்தனூா் கல்மர பூங்காவின் பெருமைகளை விளக்கும் வகையில், அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இப் பகுதியின் வரலாற்றை முழுமையாக மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில் படக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதை படிமங்களை சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விடியோ வடிவிலான காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிா் காலத்தில், மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக, நம்முடைய பூமியின் தொல்லியல் வரலாற்றை தெரிந்துகொள்ளும் அளவுக்கு அடிப்படை வசதியாக இம் மையம் அமையும். கல்மர விளக்க மையத்தை, சமூக ஆா்வலா்களிடையே புரிதல் ஏற்படுத்தி, அவா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com