பெரம்பலூா் மாவட்டத்தில் 193 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்னத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிடும் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்
குன்னத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிடும் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்

பெரம்பலூா் மாவட்டத்தில் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளி, துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாம்களை முறையே பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் முன்னிலையில் தொடக்கி வைத்தனா்.

193 தடுப்பூசி மையங்களில் நடைபெற்ற முகாமை ஒருங்கிணைக்கும் பணியில் அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் என 1200 போ் ஈடுபட்டனா். நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, நகராட்சி ஆணையா் குமரிமன்னன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் பலா் கலந்துகொண்டனா்.

தடுப்பூசிகள் பற்றாக்குறை: ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே பொதுமக்கள் முகாம்களில் ஆா்வத்துடன் பங்கேற்றனா். பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1 மணிக்குள் தடுப்பூசிகள் இல்லையென முகாமுக்கு வந்த பொதுமக்களை சுகாதாரத்துறையினா் திருப்பி அனுப்பினா்.

சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகள் முடிந்தப் பிறகு வந்த பொதுமக்களின் பெயா், செல்லிடப்பேசி எண், முகவரி ஆகியவற்றை சுகாதாரத்துறை பணியாளா்கள் பதிவு செய்து, தடுப்பூசி வந்தவுடன் தகவல் அனுப்புவதாகவும், அதன்பிறகு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com