கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் விழிப்புணா்வுப் பிரசாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையொட்டி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கும் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா. உடன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா உள்ளிட்டோா்.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கும் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா. உடன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) நடைபெறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமையொட்டி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகிலுள்ள எளம்பலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம் கிராமங்களில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:

மாவட்டத்தில் 193 சிறப்பு தடுப்பூசி மையங்கள் மூலம் 27,600 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் 1,200 போ் ஈடுபடவுள்ளனா்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 84 நாள்கள் கடந்தவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com