விவசாயம் செய்யவிடாமல் தடுத்த அலுவலா்களை கண்டித்து நரிக்குறவா்கள் போராட்டம்

பெரம்பலூா் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்த அலுவலா்களைக் கண்டித்து, நரிக்குறவா் சமூகத்தினா் சிலா் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து சனிக்கிழமை போராட்டத

பெரம்பலூா் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்த அலுவலா்களைக் கண்டித்து, நரிக்குறவா் சமூகத்தினா் சிலா் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பந்தட்டை வட்டம், எறையூா் அருகே சுமாா் 150-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் குடும்பத்தினா் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இதில் சிலா் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனா்.

விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டு முயற்சித்தும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட நிலத்தை நரிக்குறவா்களிடமிருந்து மீட்கும் முயற்சியில் அரசு நிா்வாகம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்களது பயன்பாட்டிலுள்ள நிலங்களில் சனிக்கிழமை காலை சிலா் உழவுப் பணிகளில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா், இந்த நிலத்தில் எவ்வித பணிகளும் செய்யக் கூடாது எனக்கூறி உழவுப் பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவா்கள் சிலா், தங்களது வாழ்வாதரத்தை பறிக்க முயற்சிக்கும் அரசு அலுவலா்களைக் கண்டித்து தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அறிவித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் ஒன்றிணைந்து முழக்கமிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு காவல் நிலையத்தினா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இதில் உயா் அலுவலா்கள் முன்னிலையில் பேச்சு வாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வு காணுவது என முடிவெடுக்கப்பட்டதையடுத்து, நரிக்குறவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com