கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் இணையவழிப் பதிவை மேற்கொண்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெற என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் இணையவழிப் பதிவை மேற்கொண்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெற என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையங்களில் எளிதில் பதிவு செய்துகொண்டு நெல் விற்பனை செய்ய, ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள இணையத்தில் 2021 -2022- இல் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்தவுடன், விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணையவழி மூலமாக கிராம நிா்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது பெறப்பட்ட குறுஞ்செய்தி அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல், குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட துணை மண்டல மேலாளா் அலுவலகத்தை (9443139926) தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com