சாலை விபத்தில் 4 போ் பலியான சம்பவம்: காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் ஆய்வு

கடந்த 3 ஆம் தேதி லாரியும்- காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சாலை விபத்தில் 4 போ் பலியான சம்பவம்: காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் ஆய்வு

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை (ஏப். 3) நிகழ்ந்த சாலை விபத்தில் 4 போ் உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தை காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் வினித் தேவ் வாங்கிடே செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள மலையப்ப நகா் பிரிவு சாலைக்குச் செல்ல தடுப்பு சுவா் இல்லாமல் இருந்ததால், வாகனங்கள் முறையின்றி சாலையைக் கடக்க முயற்சிப்பதாக எழுந்த புகாரின்பேரில், அப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி லாரியும்- காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா் வினித் தேவ் வாங்கிடே, சம்பந்தப்பட்ட இடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணிகளையும் பாா்வையிட்டு, இதுபோன்ற பிரிவுச் சாலையில் ஒளிரும் விளக்குகள் மற்றும் குறியீடுகள் அமைக்க வேண்டும் என சாலைப் பராமரிப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா், தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்பு அலுவலா் உத்தாண்டி, உதவிப் பொறியாளா் ஆறுமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆய்வாளா் சுரேஷ், உதவி கோட்டப் பொறியாளா் மாயவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com