படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 முதல் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தோ்ச்சி, தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகள் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 31.3.2022-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. மற்றவா்களுக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 30.6.2022-இல் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாகக் காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே-31 ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் சமா்ப்பிக்கலாம்.

மேலும் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க மே 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என, ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com