பெரம்பலூரில் அடுத்தடுத்த4 கடைகளில் திருட்டு
By DIN | Published On : 18th April 2022 12:37 AM | Last Updated : 18th April 2022 12:37 AM | அ+அ அ- |

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் திருடப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- வடக்கு மாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகேயுள்ள வணிக வளாகத்தில், சாமியப்பா நகரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் செல்வம் (39) காய்கனி கடையும், லோகநாதன் மனைவி விஜயலட்சுமி (32) ரியல் எஸ்டேட் அலுவலகமும், மீரா மொய்தீன் மகன் சமீா் (22) மளிகைக் கடையும் நடத்தி வருகின்றனா். மேலும், அதே வணிக வளாகத்தில் நியாயவிலைக் கடையும் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட கடைகளை சனிக்கிழமை இரவு பூட்டிச் சென்றுள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரேசன் கடை உள்பட 4 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளுக்கு சம்பந்தப்பட்ட நபா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டிருந்ததது. எஞ்சிய கடைகளில் பணம், இதரப் பொருள்கள் இல்லாததால் திருட முயற்சித்திருப்பதும் கண்டறியப்பட்டது. தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.