சாலை விபத்தில் 9 போ் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 போ் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 போ் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் மோகன் (36).

இவரது மனைவி லெட்சுமி (32), மகள்கள் பவித்ரா (14), நிவேதா (8), மகன் வரதராஜன் (5), உறவினா்கள் முரளி (55), மேகலா (19), நாராயணன் (40), பூபதி (23) ஆகிய 9 பேரும், ஒரு காரில் காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி கடந்த 2018, மே மாதம் 11-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சியிலிருந்து கடலூா் மாவட்டம், பெண்ணாடம் நோக்கிச் சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத் தடுப்பை மீறி மறுபுற சாலையில், எதிரே காஞ்சிபுரத்திலிருந்து வந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 9 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரான பெரம்பலூா் கல்யாண் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் கோ. சக்திசரவணன் (55) என்பவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் சக்தி சரவணனுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,

ரூ.47,500 அபராதமும் விதித்து நீதிபதி ஏ. பல்கீஸ் உத்தரவிட்டாா். இதையடுத்து சக்தி சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com