முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 29th April 2022 03:54 AM | Last Updated : 29th April 2022 03:54 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்திருப்பது:
தனியாா்துறை நிறுவனங்கள் சாா்பில், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளன.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண்கள் முகாமில் கலந்துகொள்ளலாம்.
இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப் படமாட்டாது. விருப்பமுள்ள இளைஞா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.