முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூரில் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நிறைவு
By DIN | Published On : 30th April 2022 11:36 PM | Last Updated : 30th April 2022 11:36 PM | அ+அ அ- |

சிறப்பாக அரங்கு அமைத்த அரசு அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில், செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் நடைபெற்ற 75- ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த 24-ஆம் தேதி கண்காட்சியை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைத்தாா். இக்கண்காட்சியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தமிழக வீரா்களின் புகைப்படங்கள், மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். பள்ளி, கல்லூரி மற்றும் அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து கண்காட்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அரசுத் துறை அலுவலா்களைக் கௌரவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் குகநேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் கருணாநிதி, மாவட்ட சமூகநல அலுலவா் ரவிபாலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.