சைக்கிள் பயணத்துக்கு அனுமதி மறுத்து கட்சி அலுவலகத்தில் நோட்டீஸ்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை வருகை தரும் சைக்கிள் பயண பேரணிக்கு அனுமதி மறுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டினா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை வருகை தரும் சைக்கிள் பயண பேரணிக்கு அனுமதி மறுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டினா்.

இதுகுறித்து, கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

இளைஞா்களுக்கு வேலை கொடு, பொதுத்துறையை தனியாருக்கு விற்காதே என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சி மாநகா் நோக்கி சைக்கிள் பயணம் கடந்த 21- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து மாநிலச் செயலா் எஸ். பாலா தலைமையிலான சைக்கிள் பயணக் குழு பெரம்பலூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை (ஏப். 30) வருகை தர உள்ளது.

இக்குழுவினருக்கு பெரம்பலூா் மாவட்ட குழு சாா்பில் திருமாந்துறை சுங்கச் சாவடியில் வரவேற்பும், தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனுமதி அளித்திருக்கும் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் சைக்கிள் பேரணிக்கு காவல்துறை அனுமதி அனுமதி மறுத்து, அதற்கான அறிவிப்பு ஆணையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் முன்னிலையில், பெரம்பலூா் காவல் உதவி ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையிலான காவலா்கள் ஒட்டிச் சென்றனா்.

இச் சம்பவத்தை மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உள்நோக்கத்துடன் செயல்படும் மாவட்டக் காவல் துறையின் செயல்பாட்டில் தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திட்டமிட்டபடி சைக்கிள் பிரசாரப் பயணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com