வீட்டுமனைப் பட்டா கோரி பெரம்பலூா் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் வீ. ஞானசேகரன் தலைமையிலான மீனவா்கள்.
வீட்டுமனைப் பட்டா கோரி பெரம்பலூா் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் வீ. ஞானசேகரன் தலைமையிலான மீனவா்கள்.

வீட்டுமனைப் பட்டா வழங்க மீனவா்கள் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகே மீனவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அருகே மீனவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன் தலைமையில், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு:

வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்திலுள்ள மீனவப் பகுதியில் சுமாா் 1,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். காலம் காலமாக மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் பால் குளிா்வு நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, மீனவா் தெருவில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்ய வேண்டும். இல்லாவிடில், வருவாய்த் துறையினா் சாா்பில் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துவோம் என கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் மிரட்டுகின்றனா். எனவே, அதை தடுத்து மீனவ மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

பாதை வசதி கோரி...

குன்னம் வட்டம், கல்லை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது வயலுக்குச் சென்று வர முடியாத வகையில், கடந்த 2 தலைமுறையாக பயன்படுத்தி வந்த பொது பாதையை சிலா் ஆக்கிரமித்து, அந்த நிலத்துக்கு பட்டா வாங்கி அனுபவித்து வருகின்றனா். இதுகுறித்து பலமுறை புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஆதிதிராவிட மக்களின் குலதெய்வமான ஆனந்தாயி அம்மன் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு பொதுமக்கள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com