போக்சோவில் கல்லூரி மாணவா் கைது
By DIN | Published On : 11th August 2022 12:00 AM | Last Updated : 11th August 2022 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சஞ்சீவிராஜா (21). பெரம்பலூா் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரான இவா், கடந்த 7 ஆம் தேதி முதலாமாண்டு செவிலியா் படிப்பு பயிலும் கல்லூரி மாணவியை கடத்தி வெளியூா் சென்றுவிட்டாராம். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கும்மிடிப்பூண்டியில் தலைமறைவாக இருந்த இருவரையும் பெரம்பலூா் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சஞ்சீவிராஜாவை கைதுசெய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மீட்கப்பட்ட மாணவி ஆலம்பாடி சாலை குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா்.