மானிய நிதி பெற பெண் ஓட்டுநா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 18th December 2022 01:52 AM | Last Updated : 18th December 2022 01:52 AM | அ+அ அ- |

தொழிலாளா் நல வாரியம் மூலம் பயணியா் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானிய நிதி பெற, பதிவு செய்துள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஓட்டுா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகப் பாதுகாப்புத் திட்டத் தொழிலாளா் நல உதவி ஆணையா் மு. பாஸ்கரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஓட்டுநா் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்களை ஊக்குவிக்கவும், அவா்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையிலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா் மற்றும் தானியங்கி மோட்டாா் பழுது நீக்கும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் உறுப்பினா்களுக்கு புதிதாக பயணியா் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானிய நிதி உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவு செய்த என்ற பெண் உறுப்பினா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையவழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், இதுவரை மேற்கண்ட நல வாரியத்தில் பதிவு செய்யாத பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள் புதிதாக பதிவு செய்து, திருமணம், மகப்பேறு. கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெறலாம்.