முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 07th February 2022 12:23 AM | Last Updated : 07th February 2022 12:23 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை, தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட முத்திரைத்தாள் பிரிவு தனி வட்டாட்சியா் பழனிச்செல்வன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை குழுவினா், பெரம்பலூா் அருகிலுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்த படைக்காத்து மகன் நல்லதம்பி (45), உரிய ஆவணங்களின்றி ரூ. 1.50 லட்சத்தை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா்,அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.