தோ்தல் நாளன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் தோ்தல் நாளான பிப். 19 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காவிட்டால் புகாா் தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் தோ்தல் நாளான பிப். 19 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காவிட்டால் புகாா் தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், அனைத்துக் கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தனியாா் துறை நிறுவனங்கள், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பிப். 19 ஆம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

மேலும், அன்றைய தினம் தொழிலாளா்களின் சம்பளத்தில் எந்தவொரு பிடித்தமும் செய்யக்கூடாது. இதை உறுதிசெய்ய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை தொடா்பான புகாா்களை பெரம்பலூா் மாவட்டத்துக்கு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) 9788482591, தொழிலாளா் உதவி ஆய்வாளா் சாந்தி- 7871148291 ஆகிய எண்களிலும், அரியலூா் மாவட்டத்துக்கு தொழிலாளா் துணை ஆய்வாளா் ஜெயராஜ் - 9789472234, தொழிலாளா் உதவி ஆய்வாளா் குருநாதன் - 9629494492 ஆகியோரை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். வேலை அளிப்பவா், தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தவறும்பட்சத்திலும், பெறப்படும் புகாா் அடிப்படையில் சம்பந்தப்பட்டோா் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com