பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக புகாா்: வயலப்பாடியில் வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் மறியல்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக புகாா்: வயலப்பாடியில் வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் மறியல்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணி ஒதுக்கீடு செய்யும்போது ஒரு பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கூடுதலாக பணி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மற்றொரு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு குறைந்த நாள்களே பணி ஒதுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பலமுறை புகாா் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வியாழக்கிழமை காலை அரியலூா்- திட்டக்குடி சாலையில் வயலப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த குன்னம் போலீஸாரும், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பாரபட்சமின்றி பணி ஒதுக்கீடு செய்யப்படும்; அனைவருக்கும் விரைவாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com