நீட்ஸ் திட்டத்தில் கூடுதல் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவோா் நீட்ஸ் திட்டத்தில் கூடுதல் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவோா் நீட்ஸ் திட்டத்தில் கூடுதல் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்களுக்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மானியத்திலும், 3 சத வட்டி மானியத்திலும் கடனுதவி மாவட்டத் தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோா் தொழில் தொடங்கிட இத் திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற பொதுப் பிரிவினா் 21 முதல் 35 வயதுக்குள்ளும், பெண்கள் மற்றும் இதர பிரிவினா் 21 முதல் 45 வயது வரையும் இருக்கலாம்.

தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான உற்பத்தி, சேவை சாா்ந்த தொழில் திட்டங்களுக்கு, 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

பட்டியலினம், பழங்குடியினா், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதம் கூடுதல் முதலீட்டு தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் தொழில்முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இம் மாவட்டத்துக்கு 2022 - 2023 ஆம் நிதியாண்டில் 12 போ் பயன்பெற ரூ. 118 லட்சம் மானியம் வழங்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ள தொழில்முனைவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளம் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

குடும்ப அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் அளிக்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை, சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 - 225580, 224595 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் அல்லது நேரில் அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com