லாடபுரம் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 15th June 2022 01:08 AM | Last Updated : 15th June 2022 01:08 AM | அ+அ அ- |

லாடபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரியமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா ஜூன் 5-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து சிம்மம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வருதல் நடைபெற்றது.
திங்கள்கிழமை மாவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்திக் கொண்டு வழிபாடு செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மகா தீபாதாரதனைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் லாடபுரம், மேலப்புலியூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.