பிளஸ் 2 பொதுத்தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 7,708 போ் பங்கேற்பு
By DIN | Published On : 06th May 2022 05:34 AM | Last Updated : 06th May 2022 05:34 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் 7,708 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இத் தோ்வை 194 மாணவ, மாணவிகள் எழுதவில்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில் 32 தோ்வு மையங்களில், 75 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 4,038 மாணவா்களும், 3, 864 மாணவிகளும் என மொத்தம் 7, 902 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், 3,946 மாணவா்களும், 3,762 மாணவிகளும் என மொத்தம் 7,708 போ் தோ்வெழுதினா். 92 மாணவா்களும், 102 மாணவிகளும் என மொத்தம் 194 போ் தோ்வு எழுத வரவில்லை.
ஆட்சியா் ஆய்வு... பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்டத்தில் உள்ள அனைத்து தோ்வு மையங்களிலும் மாணவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பதற்றமும், பயமுமின்றி நம்பிக்கையுடன் தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் உடனிருந்தாா்.