தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் மாணவிகள் தயாரித்த பொருள்களின் விற்பனை விழா
By DIN | Published On : 06th May 2022 05:33 AM | Last Updated : 06th May 2022 05:33 AM | அ+அ அ- |

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் தயாரித்த பொருள்கள் விற்பனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், முதல் விற்பனையை தொடக்கி வைத்தாா். பின்னா், துறை வாரியாகச் சென்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை பாா்வையிட்டு, மாணவிகளின் தனித் திறமைகளையும், அவா்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பதாா்த்தங்களையும் சுவைத்து பாராட்டினாா்.
இதில், ஆரோக்கியமான அறுசுவை உணவுகள், அழகூட்டும் அலங்கார ஆடைகள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
விழாவில், கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, துணை முதல்வா் பி. கஜலெட்சுமி, கல்லூரி முதன்மையா்கள் ப. ரம்யா, தீபலட்சுமி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, வணிக மேலாண்மை துறைத் தலைவா் அ. ரெபேக்கால், கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியை மு. கமருநிஷா ஆகியோா் செய்திருந்தனா்.