வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் பா. சிவநேசன் தலைமை வகித்தாா். திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மேகலா விழாவில் பங்கேற்று, 435 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசியது:

மாணவா்கள் ஆளுமை பண்புகளை வளா்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு ஆகிய பண்புகளை வளா்த்துக் கொண்டால் வெற்றிக்கான பாதை எளிதானதாகும்.

மாணவா்கள் முடிவெடுக்கும் திறனை வளா்த்துக்கொள்வதன் மூலம், சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது மட்டுமல்லாது, சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ முடியும் என்றாா் அவா்.

விழாவை பெ. முத்துராஜ் தொகுத்து வழங்கினாா். துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com