மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 30,489 பேருக்கு சிகிச்சை

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் 30,489 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 30,489 பேருக்கு சிகிச்சை

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் 30,489 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து

செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:

உங்கள் தொகுதியில் முதல்வா் என்னும் துறை மூலம் பெறப்பட்ட 3,481 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 20,285 போ் பயணித்துள்ளனா். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 14,066 பயனாளிகளுக்கு ரூ. 51.62 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 30,489 பேருக்கு 31,248 நோய்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரத்தக் கொதிப்பு உள்ள 40,075 பேருக்கும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 33,192 பேருக்கும் என மொத்தம் 91,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 154 போ் காப்பாற்றப்பட்டுள்ளனா். மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ரூ. 20.10 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 5,984 நபா்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 116 குழந்தைகளுக்கு ரூ. 3.48 கோடியும், இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கு ரூ. 5 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆலம்பாடி, எளம்பலூா், பரவாய் சமத்துவபுரங்களில் ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பலுாா் நகராட்சியில் ரூ. 115 லட்சம் மதிப்பில் அறிவுசாா் மையம், நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மூலம் 41 வருவாய்க் கிராமங்களில் 300 விவசாயிகளுக்கு தலா ஒரு கறவை மாடு, 10 ஆடுகள், 15 நாட்டுக் கோழிகள், தேனீப் பெட்டிகள், 32 பழ மரக்கன்றுகளும், இலவச மின் இணைப்புத் திட்டத்தின் மூலம் 1,153 விவசாயிகளுக்கு ரூ. 12 கோடி மதிப்பிலான மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை மூலம் இதுவரை 14,594 முதியோா்களுக்கும், 4,258 மாற்றுத்திறனாளிகளுக்கும், 17,621 ஆதரவற்ற விதவைகளுக்கும் மதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதல்வரின் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் 40 நீா்வழித் தடங்களில் ரூ. 2.485 கோடி மதிப்பீட்டில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, நகராட்சித்

தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் பாண்டியன், நகராட்சி ஆணையா் ச. குமரிமன்னன், மருதையாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளா் வேல்முருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் இந்திரா உள்ளிட்ட பலா் உடனிருந்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com