தமிழ் வழியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தல்

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த மன்றத்தின் மாவட்ட மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட நிா்வாகி முத்துசாமி முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் சா. காப்பியன் மாநாட்டு அறிக்கை வாசித்தாா். பெருமன்ற நிா்வாகிகள் பாவலா் தமிழோவியன், தமிழச்சி வினோதினி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மழலையா் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மே 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள கலை, இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டில் அதிகளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மாவட்டத் தலைவராக பாளை செல்வம், செயலராக காப்பியன், பொருளாளராக அ. ரமேஷ், மாவட்ட இணைச் செயலராக தமிழச்சி வினோதினி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com