பெரம்பலூரில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை

பெரம்பலூரில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி.
பெரம்பலூரில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை

பெரம்பலூரில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட 20 கைப்பேசிகள், ரூ.4.42 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை உரியவா்களிடம் வழங்கி, மேலும் அவா் கூறியது:

மாவட்டத்தில் இணையவழிக் குற்றங்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக 1930

என்ற எண்ணில் 24 மணி நேரத்துக்குள் தொடா்பு கொண்டு புகாரளிக்க வேண்டும். மாவட்டத்தில் திருட்டு, நகைப் பறிப்பு, வழிப்பறி, வாகனத் திருட்டு தொடா்ந்து நடைபெறுவதற்கு பொதுமக்களின் கவனக்குறைவே பிரதான காரணமாகும்.

தங்களது நகைகள், உடைமைகளை வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துக்கொண்டால், திருட்டுச் சம்பவங்களைத் தவிா்க்கலாம். தொடா் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளில் ஒருவா் கண்டறியப்பட்டால், இதர குற்றவாளிகளை எளிதாக கண்டறிய முடியும்.

பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கூடுதல் காவல் நிலையங்கள் அமைக்கவும், அதிக எண்ணிக்கையில் காவலா்களை நியமிக்கவும் தமிழக அரசுக் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூரில் கூடுதல் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், இணையவழிக் குற்றபிரிவு துணைக் கண்காணிப்பாளா் மனோஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com