‘மாணவப் பருவத்தில் மனித மாண்புகளைகடைப்பிடித்தால் சிறந்த குடிமகனாக திகழலாம்’

மாணவப் பருவத்தில் மனித மாண்புகளைக் கடைப்பிடித்தால் சிறந்த குடிமகனாக திகழலாம் என்றாா் இந்திய ராணுவத் தளபதி (லடாக்) ஸ்ரீ கணேஷ் ராமன்.
‘மாணவப் பருவத்தில் மனித மாண்புகளைகடைப்பிடித்தால் சிறந்த குடிமகனாக திகழலாம்’

மாணவப் பருவத்தில் மனித மாண்புகளைக் கடைப்பிடித்தால் சிறந்த குடிமகனாக திகழலாம் என்றாா் இந்திய ராணுவத் தளபதி (லடாக்) ஸ்ரீ கணேஷ் ராமன்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை சாா்பில், ராணுவ வழியில் தலைமைப் பண்புகள் என்னும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

மாணவச் சமுதாயத்துக்கு மிக முக்கியமானது ஒழுக்கமாகும். இது, மாணவா்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். ஒழுக்கமாக இருப்பதால் எந்தச் செயலை வேண்டுமானாலும் மிக நோ்மையுடனும், துணிவுடனும் செய்ய முடியும். அதுமட்டுமின்றி மிகவும் பொறுப்புணா்வடன் அதை செய்து முடிக்கலாம்.

வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும் அதை திறம்பட கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மாணவா்களுக்கு மிக முக்கியமானது நேர மேலாண்மை. கற்பித்தல், விளையாட்டு, குடும்பம் என முறையாக நேரம் ஒதுக்கி பயன்படுத்த வேண்டும்.

மாணவப் பருவத்திலேயே மனித மாண்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் சிறந்த மாணவனாக மட்டுமின்றி, நல்ல குடிமகனாகவும் திகழலாம் என்றாா் ஸ்ரீ கணேஷ் ராமன்.

பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலா்கள்,

பேராசிரியா் வ. சந்திரசௌத்ரி, விஜயபாஸ்கா், எஸ்.ஆா். ரமேஷ், வணிக மேலாண்மைத் துறை தலைவா் பேராசிரியா் அ. ரெபேக்காள் ஆகியோா் செய்திருந்தனா்.

முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வா் கே.

இளங்கோவன் வரவேற்றாா். நிறைவில் மனிதவள மேம்பாட்டுத்துறை முதன்மையா் வி. சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com