முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
மே 19-இல் பழைய வாகனம் பொது ஏலம்
By DIN | Published On : 12th May 2022 01:20 AM | Last Updated : 12th May 2022 01:20 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில், மே 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியரக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோா் மே 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் நுழைவுக் கட்டணம் ரூ. 50, முன்வைப்புத் தொகையாக ரூ. 2 ஆயிரம் செலுத்தி பங்கேற்கலாம்.
அரசு நிா்ணயித்த தொகையைவிட, கூடுதலாக கேட்கும் ஏலதாரா், தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி 18 சதவீதத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். பின்னா், ஏலதாரருக்கு விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆட்சியரால் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.