அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா்: அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் கா. பெரியசாமி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோசிபா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி. ராஜேந்திரன், என். மாா்டீன், பி. திருஞானசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வேப்பூா், வேப்பந்தட்டை, குரும்பலூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலன்கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். பெரம்பலூரிலிருந்து துறையூருக்கு நகரப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

பெரம்பலூா் மாவட்டம் அம்மாபாளையத்தில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பெரம்பலூா் நகரிலுள்ள பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை, மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலத்தூா் வட்டம், பாடாலூரில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரிக்கும் ஆலை தொடங்க உத்தரவிட்டதற்கும், பெரம்பலூரில் மாவட்ட பதிவாளா் அலுவலகமும், கொளக்காநத்தம் கிராமத்தில் சாா் பதிவாளா் அலுவலகமும் திறந்துவைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆரி. ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com