கோனேரிபாளையத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ முருகன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ மதுரைவீரன் கோயில் சித்திரை தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோனேரிப்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்.
கோனேரிப்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ முருகன், ஸ்ரீ வரதராஜபெருமாள், ஸ்ரீ மதுரைவீரன் கோயில் சித்திரை தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் தொடக்கமாக, கடந்த 3 ஆம் தேதி முகூா்த்தகால் நடப்பட்டு, குடியழைத்தல் சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

8 ஆம் தேதி மாவிளக்கு பூஜையும், 9ஆம் தேதி அலகுக் குத்துதல், அக்னிச் சட்டி, பால் குடம் எடுத்தல் மற்றும் சிறப்பு பூஜைகளும், 10 ஆம் தேதி குடியழைத்தல், பொங்கலிட்டு மாவிளக்கு பூஜையும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

விழாவான முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து வந்தனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மாலை நிலையை வந்தடைந்தது. இதில், கோனேரிபாளையம் உள்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். மஞ்சள் நீராட்டுடன் விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.

பெரிய வெண்மணி நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்... குன்னம் அருகேயுள்ள பெரிய வெண்மணி கிராமத்திலுள்ள நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயி அம்மன் கோயில் திருவிழா கடந்த 3 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை காலை நாச்சாரம்மன், மாணிக்கம்மன், மாக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னா், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினா். கிராம முக்கியஸ்தா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனா். விழாவில் கொளப்பாடி, சின்ன வெண்மணி, புதுவேட்டக்குடி, காடூா், நல்லறிக்கை, வேப்பூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com