பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா்: புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநில பொருளாளா் ச. துரைராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 7 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மனிதவள மேம்பாட்டு மானிய கோரிக்கையின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த கூடுதல் நிதி தேவைப்படுவதையும், அரசின் செலவினத்தை குறிப்பிட்டு நிதி அமைச்சா் பேசியது மிகுந்த வேதனைக்குரியது. எனவே, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com