முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
கல்பாடி அய்யனாா் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 14th May 2022 11:42 PM | Last Updated : 14th May 2022 11:42 PM | அ+அ அ- |

கல்பாடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அய்யனாா் கோயில் தேரோட்டம்.
பெரம்பலூா் அருகே கல்பாடி கிராமத்திலுள்ள அய்யனாா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்திலுள்ள அய்யனாா், பூரணி, மண்டபத்து முத்துசாமி, தொட்டியத்தான் சுவாமி, புது கருப்பண்ணாா் சுவாமி ஆலயத்தின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29 -ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. பல்வேறு வகையான பொருள்களால் உற்ஸவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் உற்ஸவா் தேருக்கு கொண்டு வரப்பட்டு, திருஷ்டி பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. கிராம மக்கள் தோ்வடம் பிடித்து இழுத்தனா். பிரதான வீதிகள் வழியாக வலம் வந்த தோ், மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா்.