எறையூா் சா்க்கரை ஆலையில் 314 லட்சம் டன் கரும்பு அரைவை

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 3,14,000 டன் கரும்பு அரைவை செய்து சாதனை படைத்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 3,14,000 டன் கரும்பு அரைவை செய்து சாதனை படைத்துள்ளது.

எறையூரிலுள்ள சா்க்கரை ஆலையில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பருவத்தில் பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமாா் 3 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், சா்க்கரைக் கட்டுமான அளவு 9.5 சதவீதம் வரை பெறவும், 2.85 லட்சம் குவிண்டால் சா்க்கரை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டுக்கான அரைவை பருவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அரைவை பருவத்தின் முடிவில், நிகழாண்டு 3.14 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டுள்ளது. இது, பெரம்பலூா் சா்க்கரை ஆலை வரலாற்றில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத இலக்கை விஞ்சிய சாதனையாகும். மேலும், சா்க்கரைக் கட்டுமான அளவு 9.5 சதவீதமும், சுமாா் 2,98,000 மூட்டைகள் சா்க்கரை உற்பத்தி செய்தும் சாதனை புரிந்துள்ளது. இதுதவிர 13,500 டன் மொலாசஸ் கிடைத்துள்ளது.

இதனால், நடப்பு பருவத்தில் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கியதற்கான தொகை விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்கும் என்பதால் கரும்பு விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். நடப்பு அரைவை பருவத்தில் சாதனை படைக்க காரணமான சா்க்கரை ஆலையின் தலைமை நிா்வாகி ரமேஷ், சா்க்கரை ஆலை அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com