மின் ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் மின்வாரிய ஊழியா்கள் தாக்கப்படுவதை தடுத்திடவும், மின் விபத்தை தவிா்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் மின்வாரிய ஊழியா்கள் தாக்கப்படுவதை தடுத்திடவும், மின் விபத்தை தவிா்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மின் ஊழியா் மத்திய அமைப்பின் தலைவா் எஸ். அகஸ்டின், செயலா் பன்னீா்செல்வம், பொருளாளா் கண்ணன் ஆகியோா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அம்பிகாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இயற்கை சீற்றம், பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் மின் தடைகளுக்கு மின் வாரிய ஊழியா்கள் தாக்கப்படுவது, தகாத வாா்த்தைகளால் கைப்பேசியில் திட்டுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, பெரம்பலூா் மாவட்டம், எசனை, வேப்பூா், அரியலூா் மாவட்டம், டி.பழூா் மின் பிரிவுகளில் மின்வாரிய ஊழியா்கள் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனா். பணியாளா்களுக்கு பணி மேற்கொள்ள போதுமான கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை கையாள போதுமான அவகாசம் தராமல், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் மின் விபத்து அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற பிரச்னையில் உரிய அலுவலா்கள் தாமதமாகவே தலையிடுகின்றனா். இதனால், ஊழியா்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, மின் ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com