அங்கக உற்பத்தியாளருக்குப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ், அங்கக உற்பத்தியாளா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ், அங்கக உற்பத்தியாளா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 30 நாள்களாக நடைபெற்ற பயிற்சியில் அங்கக வேளாண்மையின் கூறுகள், மண்வளப் பாதுகாப்பு, தரமான விதைத்தோ்வு, அங்கக மாற்றத்துக்கான தேவைகள், மண்ணின் ஊட்டச்சத்து மேலாண்மை, களைக் கட்டுப்பாடு, நீா்பாசனம், சொட்டுநீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நாற்புழு மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மண் மற்றும் நீா் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள், அறுவடைக்குப் பின் நோ்த்தி, தானிய சேமிப்பு தர உறுதி அளித்தல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்விளக்கம், வயல்வெளிப் பாா்வை ஆகியவை சம்பந்தப்பட்ட வேளாண் நிபுணா்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்கு பெரம்பலூா் வேளாண்மை இணை இயக்குநா் கருணாநிதி தலைமை வகித்து, பயிற்சி பெற்றவா்களுக்குச் சான்றிதழ் அளித்து பாராட்டினாா். இதில், உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் கீதா, வேளாண்மை அலுவலா் அமிா்தவள்ளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com