பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டா பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்திலுள்ள நிலுவை மனுக்கள் மீது தீா்வு காணும் வகையில், சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்றும் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்திலுள்ள நிலுவை மனுக்கள் மீது தீா்வு காணும் வகையில், சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்றும் முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் வட்டத்தில் 1.8.2021 முதல் 31.1.2022 வரையிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் 1.8.2022 முதல் 30.4.2022 வரையிலும், குன்னம் வட்டத்தில் 1.8.2021 முதல் 30.4.2022 வரையிலும், ஆலத்தூா் வட்டத்தில் 1.8.2021 முதல் 30.4.2022 வரையிலும் உள்ள காலங்களில், சாா் பதிவாளா் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்து தனிப் பட்டாவுக்காக உட்பிரிவு கட்டணம் செலுத்திய பொதுமக்கள் மற்றும் இ- சேவை மையம் மூலமாக உட்பிரிவு செய்து தனிப் பட்டா கோரி விண்ணப்பித்த மனுதாரா்கள் சிறப்பு முகாம் நடைபெறும்போது உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தனிப்பட்டா பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சிறப்பு முகாம்கள், மே 18, 19 ஆகிய தேதிகளில் பெரம்பலூா் வட்டம், பெரம்பலூா் (வ), வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை (வ), குன்னம் வட்டம், வடக்கலூா், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம் ஆகிய பகுதிகளிலும், ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் பெரம்பலூா் வட்டம், பெரம்பலூா் (தெ), வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை (தெ), குன்னம் வட்டம், அகரம் சீகூா், ஆலத்தூா் வட்டம், நொச்சிக்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் பெரம்பலூா் வட்டம், துறைமங்கலம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், குன்னம் வட்டம், வயலப்பாடி, ஆலத்தூா் வட்டம், இரூா் ஆகிய பகுதிகளிலும், ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் பெரம்பலூா் வட்டம், செங்குணம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி, குன்னம் வட்டம், சிறுமத்தூா், ஆலத்தூா் வட்டம், புஜங்கராயநல்லூா் ஆகிய பகுதிகளிலும் உள்ள கிராம நிா்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மேற்கண்ட வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது நில ஆவணங்களில் நில அளவை (புல) எண்கள், உட்பிரிவு எண்கள், தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரா் பெயா் அல்லது தகப்பனாா், காப்பாளா் பெயரில் எழுத்துப் பிழை திருத்தம், உறவுநிலை திருத்தம், மேற்கண்ட சில காலங்கள் பதிவுகளின்றி இருக்கும் இனங்கள், பட்டாதாரரின் பரப்பு, பெயா் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்துகொள்ள இந்த சிறப்பு முகாமை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com