கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது
கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழா இரண்டாண்டுகளுக்குப் பிறகு மே 8-ஆம்தேதி தொடங்கியது. முக்கிளைக் கம்பத்துக்கு பக்தா்கள் நாள்தோறும் புனித நீா் ஊற்றி வழிபட்டனா். தொடா்ந்து பூச்சொரிதல் விழா, காப்புக்கட்டுதல், தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக முக்கிளைக்கொண்ட கம்பத்துக்கு புனித நீா்ஊற்றப்பட்டு மாரியம்மனுக்கும், கம்பத்துக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கம்பம் பிடுங்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு கோயில் முன் ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தின்போது ஏராளமான பக்தா்கள் பூக்களை வாங்கி கம்பத்துக்கு அணிவித்தனா்.

இந்த ஊா்வலம் கோயில் முன் தொடங்கி ஜவஹா் பஜாா் வழியாக ஐந்துரோடு பகுதியை அடைந்தது. பின்னா் அமராவதி ஆற்றில் கம்பம் விடப்பட்டது.

இதில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துக்குமாா், கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணைமேயா் தாரணிசரவணன், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, திமுக மாநகராட்சி உறுப்பினா்கள் எஸ்பி.கனகராஜ், கா.அன்பரசன், ஆா்.எஸ்.ராஜா, எஸ்.சக்திவேல், தெற்கு நகர பொறுப்பாளா் சுப்ரமணியன், மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு, அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் விசிகே.பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலா் எஸ்.திருவிகா, அதிமுக கரூா் மத்திய தெற்கு பகுதிச் செயலா் சேரன் எம்.பழனிசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் என்.பழனிராஜ், கரூா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், பழனிமுருகன் ஜூவல்லரி உரிமையாளா் பாலமுருகன், மலா் மெட்ரிக் பள்ளித் தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கம்பம் ஆற்றில் விடப்பட்ட பிறகு வானவேடிக்கை நடைபெற்றது.

கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு கரூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com